பெயர் காரணம்:-
“மல்” எனும் சொல் வளத்தை குறிக்கும். “மல்லன்” என்றால் வீரன் என்று பொருள். உடல் வளம் கொண்ட வீரர்கள் கம்பத்தில் உடலை வளைத்து விளையாடப்படும் வீரக்கலையே மல்லர்கம்பம்.
மல்யுத்த வீரர்கள் ஆரம்பத்தில் மல்லர்கம்பம் பயின்ற பிறகே மல்யுத்த பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
வரலாறு:-
சோழர் பல்லவர்கள் காலத்தில் பொpதும் இக்கலை விளையாடப்பட்டது. போர்வீரர்கள் தன் உடலை வலுப்படுத்த கருங்கல் மரத்தால் ஆன மனித வடிவ கம்பத்தில் ஏறி உடலை வில்லாக வளைத்து தன் உடலை வலுப்படுத்தினர்.
காஞ்சியை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவன் மல்யுத்தத்திலும் மல்லர்கம்ப விளையாட்டிலும் தலைசிறந்து விளங்கியதால் “மாமல்லன்” என பெருமையோடு அழைக்கப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாராஷடரா மாநிலத்தை சார்ந்த பாலபட்ட தாதா தியோதர் என்பவர் மல்லர்கம்ப தந்தை என அழைக்கப்படுகிறார்.
மல்யுத்த பயிற்சியாளர் ஆன இவரை குலாம் அலி என்ற இரு மல்யுத்த வீரர்கள் யார் பொpயவர் என சோதிக்க மல்யுத்த போட்டிக்கு அழைத்தனர்.
அவர்களிடம் 21 நாட்கள் கால அவகாசம் கேட்டுஇ தன் சொந்த ஊரான நாசிக் எனும் இடத்திற்கு சென்று தன் குல தெய்வம் “சுங்கி தேவி” தெய்வத்தை வணங்கி பயிற்சியை மேற்கொண்டார்.
குரங்கு ஒன்று மரத்தில் தன் கால்களை பின்னி மல்யுத்த யுத்திகளை கையாளுவது போல் கனவு கண்ட இவர் மனித வடிவில் மரத்தால் ஆன கம்பத்தில் ஏறி தன் உடலை வலுபடுத்தி கொண்டு 21 நாட்களுக்கு பிறகு மல்யுத்த போட்டியில் வெற்றி கண்டார்.
பின்நாளில் இக்கலையை பயிற்சியின் மூலம் மெருகேற்றியதால் மல்லர்கம்பத்தின் தந்தை என பெயர் பெற்றார்.
தமிழகத்தில் திரு. உலகதுரை அவர்கள் மூலம் தற்போது பல மாவட்டங்களில் மல்லர்கம்ப பயிற்சியானது அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு தற்போது பள்ளி விளையாட்டாக அறிவித்துள்ளது.நம் தருமபுரி மாவட்டத்திலும் மல்லர்கம்ப கலையை கற்க ஏதுவாக தமிழர் தற்காப்புப் பயிற்சிப்பள்ளி சார்பில் “தருமபுரி மாவட்ட மல்லர்கம்ப சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம்.
வகைகள்:-
மூன்று வகையான மல்லர்கம்ப கலைகள் நிகழ்த்தப்படுகிறது.
- நிலைக்கம்பம்
- தொங்கும் மல்லர்கம்பம்
- கயிறு மல்லர்கம்பம்
நிலைக்கம்பம்:-
தரையில் நிலையாக நிறுத்தி வைக்கப்பட்ட கம்பத்தில் உடலை வில்லாக வளைத்து உடலையும் மனதையும் ஒரு சேர பயிற்சியை மேற்கொள்வர்.
10க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கம்பத்தில் ஏறி பல்வேறு நிலையினை செய்வது பிரமிடு என்பதாகும்.
தொங்கும் மல்லர்கம்பம்:-
அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட மல்லர்கம்பத்தில் ஏறி கைஇ கால்களை வளைத்து மேற்கொள்ளப்படும் பயிற்சிக்கு தொங்கும் மல்லர்கம்பம் எனப்படும்.
கயிறு மல்லர்கம்பம்:-
பட்டு நூலால் ஆன கயிற்றை தொங்கவிடப்பட்டு அதில் கால்இ விரல்களை கொண்டு ஏறி பல்வேறு யோகாசனங்களை செய்யும் கலைக்கு கயிறு மல்லர்கம்பம் எனபெயா;.
பயன்கள்:-
மல்லர்கம்பம் பயிற்சியை மேற்கொள்வதால் உடல்இ மனம் வலிமை அதிகாpக்கிறது.
மாணவர்கள் பயிற்சியை மேற்கொள்ளும் போது அவர்களின் உற்று நோக்கும் திறன் மேம்படுகிறது.
வளாp (திகிhpஇ வளைதடிஇ வளாpஇ கள்ளா;தடிஇ பாராவலைஇ சுழல்படைஇ சுழல்வட்டம்)