கோலாட்டம்

இரண்டு கையிலும் ஒரு முழ கோல்களை கொண்டு குறைந்தது 6 பேர் முதல் வட்டமாக நின்று அனைவரும் ஒருமித்த மனதோடு கை கால்களை அசைத்து தங்களின் விருப்ப தெய்வத்தை நினைத்து பாடல் பாடி கொண்டு ஆடும் ஆட்டம் கோலாட்டம்.

பொதுவாக கோலாட்டமானது சிவபெருமான்இ விநாயகர் முருகன் போன்ற தெய்வங்களை நினைத்து பாடல் பாடிக் கொண்டு ஆடுவர்.

கிருஷ்ணன் கடவுளை நினைத்து வட மாநிலங்களில் ஆடப்படும் கோலாட்டத்திற்கு “தாண்டியா” எனப்பெயர்

நம் முன்னோர்கள் திருவிழா காலங்களிலும்இ வயல் வெளி வேலை நாட்களிலும் அலுப்பு தெரியாமல்  இருக்க பாடல் பாடிக் கொண்டும்இ பறை ஒலி எழுப்பியும் ஒருமித்த மனதோடு ஆண் பெண் வேறுபாடின்றி கோல்களை மாறி மாறி அடித்து கொண்டு ஆடுவர்.

ஆரம்ப காலத்தில் பெண்கள் மட்டும் ஆடுவர்கள் தற்போது ஆண்களும் கோலாட்ட கலையில் சிறந்து விளங்குகின்றனர்.

கோலாட்டமானது சிலம்பத்தில் வரும் அரைக்கம்பு சண்டையை ஒத்திருப்பதால்இ இக்கலையானது சிலம்பத்திலிருந்து தோன்றி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. 

மேலும் கோலாட்டமானது “பெண்களின் சிலம்பாட்டம்” எனவும் அழைக்கப்படுகிறது.

பயன்கள் : 

“கூட்டு மனப்பான்மையின் பிறப்பிடமே கலைகள் தான்” 

ஒருமித்த மனதோடு அனைவரும் கோலாட்டம் ஆடுவதால் கவலைகள் மறந்து மனதை ஒருநிலைப்படுத்த பயன்படுகிறது.

கை கால்களை அசைத்து தொடர்ந்து ஆடுவதால் எலும்புகள்இ தசைகள் வலுப்பெறுகின்றன. மேலும் கோலாட்டமானது சிறந்த மூச்சுப்பயிற்சி கலையாகவும் உள்ளது.

ஆண் பெண் என வேறுபாடின்றி அனைவரும் கையில் கோலேந்தி வேற்றுமையை மறந்து ஒன்றாக பாடிக்கொண்டு ஆடும் கோலாட்டம் கலையும் கூட்டு மனப்பான்மைக்கான ஆகச் சிறந்த கலை.

கோலாட்டம் நாட்டுபுற கலை என்பதால் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை தென்னக பண்பாட்டு மையம் நடத்தும் அரசு நிகழ்விலும் அரசுதுறை சார்ந்த கலை நிகழ்ச்சியிலும் கோலாட்டமானது அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கோலாட்ட கலைஞர்களுக்கு வருவாயும் பதிவு செய்த கலைஞர்களுக்கு நிவாரண நிதியும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

“ஆதிசிவன் மைந்தன் எனும்

ஆணைமுகன் பாதம் – அன்புடனே

போற்றி செய்வோம் தென்புலனே நாமம்.”

என சிவபெருமானையும்இ விநாயகரையும் தொடர்ந்து முருகப்பெருமானையும் போற்றி பாடி கோலாட்டத்தை தொடங்குவர்.